என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நூல் விலை உயர்வு"
- நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
- நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.
இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.
நடப்பு மாதத்திற்கான (மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் மாத தொடக்கத்தில் அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது. இந்தநிலையில் இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நூல் விலையானது தற்போது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.192-க்கும், 16-ம் நம்பர் ரூ.202 க்கும், 20-வது நம்பர் ரூ.260 -க்கும், 24-வது நம்பர் ரூ.272-க்கும், 30-வது நம்பர் ரூ.282-க்கும், 34-வது நம்பர் ரூ.300-க்கும், 40-வது நம்பர் ரூ.320-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.257-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது.
- வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 50 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
தற்போது நூல் விலை உயர்ந்து இருப்பதால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல்லடம் பகுதியில் ரூ.600 கோடி மதிப்பிலான விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. இந்த தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்கவில்லை.
பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது. ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை. தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ. 600 கோடி மதிப்புள்ள காடா ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கிறது. உரிய விலை கிடைக்காததாலும், வெளிநாட்டு ஆர்டர்கள் இல்லாததாலும் காடா ஜவுளிகள் தேங்கி கிடக்கின்றன.
எனவே மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டில் ஜவுளித் தொழில் சீராகும் வரை நூல், கழிவுப்பஞ்சு மற்றும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வரி இல்லாமல் நூல் இறக்குமதி செய்ய சலுகை அளிக்க வேண்டும். வங்கதேசத்தில் இருந்து குறைந்த விலையில் துணிகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனை தவிர்க்க தமிழகத்தில் பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
- கடந்த மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர்.
திருப்பூர்:
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.
இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.
இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி நடப்பு மாதத்திற்கான (ஜனவரி) நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாத நிலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளனர். இதனால் திருப்பூர் ஜவுளி தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.
- தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
திருப்பூர்:
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள்.
இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும். நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை, நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்து ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி டிசம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தனர். இதில் நூல் விலை கிலோ ரூ.10 குறைந்தது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதன்படி நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.177-க்கும், 16-ம் நம்பர் ரூ.187-க்கும், 20-வது நம்பர் ரூ.245-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.237-க்கும், 24-வது நம்பர் ரூ.247-க்கும், 30-வது நம்பர் ரூ.257-க்கும், 34-வது நம்பர் ரூ.270-க்கும், 40-வது நம்பர் ரூ.290-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
- தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதில் வடமாநில தொழிலாளர்களும் லட்சக்கணக்கில் வேலை செய்து வருகிறார்கள்.
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறாக நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில் துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்தும் ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது.
இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்து, அவ்வாறு நடைமுறை இருந்து வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் இன்று அறிவித்தது.
அதன்படி கடந்த மாத விலையே தொடரும் எனவும் நடப்பு மாதத்திற்கு எந்தவித ஏற்றமும் இறக்கமும் இல்லை எனவும் நூற்பாலைகள் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் நூல் விலையில் மாற்றமின்றி தொடர்வது தொழில்துறையினரிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
நூல் விலையானது (கிலோவுக்கு) 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.187-க்கும், 16-ம் நம்பர் ரூ.197-க்கும், 20-வது நம்பர் ரூ.255-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.247-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- கடந்த பல மாதங்களாகவே விசைத்தறி ஜவுளித்தொழில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
- உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
மங்கலம்:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஸ்பின்னிங் மில்கள் செயல்படுகின்றன. இத்தொழில்களை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
கடந்த பல மாதங்களாகவே விசைத்தறி ஜவுளித்தொழில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நிலையில்லாத பஞ்சு விலை, நூல் விலையால் ஸ்பின்னிங் மில்களை முறையாக இயக்க முடியாமல் உரிமையாளர்கள் தவிக்கின்றனர். உற்பத்தியையும் குறைத்து விட்டனர். சில மில்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அதேபோல் கூலி உயர்வு கிடைக்காதது, மின் கட்டண உயர்வு, பாவு நூல் சப்ளை இல்லாதது உட்பட பல காரணங்களால் 90 சதவீத விசைத்தறிகள் முடங்கியுள்ளன.
கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூல் ரகங்கள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இயல்பாக இருந்த நூல் ரகங்களின் விலை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த மாதத்தில் இருந்த விலையை விட 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. நூல் ரகங்களின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் மில் உரிமையாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
இது குறித்து மில் உரிமையாளர் சந்திரன் கூறுகையில், தொடர்ந்து நூல் விலை சரிந்து வருவதால் உற்பத்தியை குறைந்துள்ளோம். ஒரு ஷிப்ட் மட்டுமே இயக்குகிறோம். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட நூல் ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தேங்கியுள்ளது. தற்போதைய விலைக்கு விற்றால் நஷ்டம் தான் ஏற்படும். இதேபோல் விலை வீழ்ச்சி அடைந்தால் மில்லை இயக்க முடியாது என்றார்.
கடந்த பல மாதங்களாக, துணி ரகங்களுக்கும் உரிய விலை கிடைக்காததால் பல கோடி மீட்டர் துணிகள் குடோன்களில் தேங்கியுள்ளன. ஜவுளி உற்பத்தியாளர்கள் செய்வதறியாது உள்ளனர்.
இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைத்தால் தான் இங்கு உற்பத்தியாகும் காடா துணிகள் விற்பனையாகும். ஆனால் வெளிநாட்டு ஆர்டர்கள் தற்போது சுத்தமாக இல்லை. வடநாட்டில் கேட்டாலும் ஆர்டர் இல்லை என்றுதான் கூறுகின்றனர். அதன் காரணமாக பல கோடி மீட்டர் துணி ரகங்கள் தேங்கி கிடக்கின்றன.
வேறு வழியில்லாமல், பாவு நூல் சப்ளையை நிறுத்தி விட்டோம். தொழிலாளர்களிடம் தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு வந்தால் போதும் என அனுப்பி விட்டோம். நஷ்டம் ஏற்படாமல் உரிய விலை கிடைக்கும் போது தான் துணிகளை விற்கும் நிலையில் உள்ளோம் என்றனர். விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள் முழுமையாக இயக்கப்படாததால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குடும்பத்தை நடத்த, கட்டட தொழில் உட்பட மாற்றுப் பணிகளை தேடி சென்றுவிட்டனர்.
மொத்தத்தில் விசைத்தறி ஜவுளி தொழில், தற்போதைய நிலையில் கடும் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொழிலில் ஏற்படும் வீழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், மத்திய இணையமைச்சர் முருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
விசைத்தறிகள் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள பல லட்சம் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். இந்திய அளவில் 40 சதவீத கிரே காடா துணி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகிறது. சாதா விசைத்தறியாளர்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வுக்காகவும், மின் கட்டணம் உயர்வு ஏற்படும்போதெல்லாம் மின்கட்டண குறைப்புக்காகவும் போராடி வருகின்றனர்.
வட மாநிலங்களில் மட்டுமே இங்கு தயாராகும் காடா துணிகள் மதிப்பு கூட்டப்படுகின்றன. சிறு, குறு விசைத்தறியாளர்கள், உற்பத்தி செய்யும் குறைந்தளவு துணிகளை, வட மாநிலங்களில் நேரடியாக கொண்டு சென்று விற்க முடியாது. இடைத்தரகர்கள் வாயிலாக விற்கும் போது, குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது.ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.
சோமனூர் கிளஸ்டர் பகுதியில் ஜவுளிச்சந்தை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதியும், மானியமும் வழங்க வேண்டும். அதன் வாயிலாக சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்தி கொள்ள முடியும். வருமானம் பெருகும். வாழ்வாதாரம் உயரும் என தெரிவித்துள்ளனர்.
- 2-வது முறையாக இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ. 5 உயர்ந்தது.
- நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தனர். இதில் 10 முதல் 30-வது கோம்டு வரை உள்ள நூல்கள் கிலோவுக்கு ரூ.7ம், 34 -வது கோம்டு மற்றும் அதற்கு மேல் கிலோ ரூ.5ம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாதத்தில் 2-வது முறையாக இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ. 5 உயர்ந்தது.
அதன்படி தற்போது ஒரு கிலோவுக்கு 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.187-க்கும், 16-ம் நம்பர் ரூ.197-க்கும், 20-வது நம்பர் ரூ.255-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.247-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும்.
- நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
செப்டம்பர் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.5 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆர்டர்களை பெறுகிற நிறுவனங்கள் அப்போதைய நூல் விலை உள்ளிட்ட செலவுகளை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலையை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவிப்பார்கள். இதன் பின்னர் அவர்கள் கொடுக்கிற ஆர்டர்களின் படி ஆடைகள் தயாரித்து அனுப்பிவைக்கப்படும்.
இவ்வாறாக நூல் விலை சீராக இருந்தால், வர்த்தகம் எந்த ஒரு தொய்வும் இன்றி இருக்கும். ஆனால் நூல் விலை அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள்.
ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை தாண்டி உற்பத்தி செலவு அதிகரிக்கும் பட்சத்தில், ஆடைகளின் விலையை நூல் விலையை காட்டி உயர்த்தி கேட்டால், ஆர்டர்கள் ரத்தும் ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பனியன் தொழில் நடந்து வருகிறது. இதற்கிடையே தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி கடந்த மாதம் 1ந் தேதி வெளியிட்ட அறிவிப்பில் நூல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால் கடந்த 16-ந் தேதி 2-வது கட்டமாக நூற்பாலைகள் நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 உயர்த்தின. இதனால் மீண்டும் ஏறுமுகத்திற்கு நூல் விலை சென்றுள்ளதால் தொழில்துறையினர் கலக்கம் அடைந்தனர்.
இதற்கிடையே செப்டம்பர் மாதத்திற்கான நூல் விலை உயருமா? அல்லது குறையுமா? என தொழில்துறையினர் நூற்பாலைகள் அறிவிப்பை எதிர்பார்த்தபடி இருந்தனர். அதன்படி இன்று காலை நூற்பாலைகள் நூல் விலை அறிவித்தனர். இதில் 10 முதல் 30 கோம்டு வரை உள்ள நூல்கள் கிலோவுக்கு ரூ.7ம், 34 கோம்டு மற்றும் அதற்கு மேல் கிலோ ரூ.5ம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு கிலோவுக்கு 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.182-க்கும், 16-ம் நம்பர் ரூ.192-க்கும், 20-வது நம்பர் ரூ.250-க்கும், 24-வது நம்பர் ரூ.262-க்கும், 30-வது நம்பர் ரூ.272-க்கும், 34-வது நம்பர் ரூ.285-க்கும், 40-வது நம்பர் ரூ.305-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.242-க்கும், 24-வது நம்பர் ரூ.252-க்கும், 30-வது நம்பர் ரூ.262-க்கும், 34-வது நம்பர் ரூ.275-க்கும், 40-வது நம்பர் ரூ.295-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- கழிவுப்பஞ்சு விலையேற்றத்தை தடுக்க கோரியும் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
- மின்கட்டணம் மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்கலம், காரணம்பேட்டை, மற்றும் கோவை மாவட்டம் சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஓ.இ.மில்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த மில்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 1500 டன் நூல் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் ஓ.இ.மில்களில் மூலப்பொருளான கழிவுப்பஞ்சு விலையேற்றத்தை தடுக்க கோரியும் மற்றும் மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நூல் மில்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.இந்த போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மில்களில் வேலை பார்த்து வரும் சுமார் ஐந்து ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நூல்மில் உரிமையாளர்கள் கூறுகையில்:-
மின்கட்டணம் மற்றும் கழிவு பஞ்சு விலை உயர்வால் நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக 50 சதவீதம் நூற்பாலைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில் மின்கட்டணம் உயர்வால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர் கொள்ள முடியாமல் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே அரசு மின் கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றனர்.
- பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.
- நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன் அதற்கேற்ற படி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. கடந்த 2 மாதமாக நூல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான (ஏப்ரல்) நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன. இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாத விலையே தொடரும் என அறிவித்துள்ளனர். இதன் காரணமாக திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.2955-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.
- நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
திருப்பூர்:
திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. கடந்த மாதம் நூல் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. இந்த நிலையில் நடப்பு மாதத்திற்கான ( மார்ச்) நூல் விலையை நூற்பாலைகள் இன்று வெளியிட்டன. இதில் நூல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மாத விலையே தொடரும் என அறிவித்துள்ளனர். இதன் காரணமாக தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.253-க்கும், 24-ம் நம்பர் ரூ.265-க்கும், 30-ம் நம்பர் ரூ.275-க்கும், 34-ம் நம்பர் ரூ.295-க்கும், 40-ம் நம்பர் ரூ.315-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.245-க்கும், 24-ம் நம்பர் ரூ. 255-க்கும், 30-ம் நம்பர் ரூ.265-க்கும், 34-ம் நம்பர் ரூ. 285-க்கும், 40-ம் நம்பர் ரூ.305-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பின்னலாடை துறைக்கு மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
- பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ரூ.5ஆயிரம் கோடியாக இருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் - காங்கயம் ரோடு, டாப்லைட் வளாகத்தில் பின்னலாடை எந்திர கண்காட்சி நடந்து வருகிறது. இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பின்னலாடை துறைக்கு மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். பின்னலாடை தொழில் நூல் விலை உள்ளிட்ட பல கட்ட சோதனைகளை சந்தித்திருந்தாலும் அதை சாதனைகளாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். நவீனத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மற்ற நகரங்களில் இது போன்ற சவால்களை சந்திக்கமாட்டார்கள்.
20 ஆண்டுகளுக்கு முன்பு பின்னலாடை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி ரூ.5ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் இன்று ரூ.70ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. சிரமம் என்று முடங்கி இருந்தால் இது போன்ற நிகழ்ச்சி நடைபெறாது.
ஒவ்வொருவரின் தொடர் முயற்சி இருந்து கொண்டே தான் இருக்கும். அடுத்து பின்னலாடை ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியை விரைவில் தாண்டும். அழிவே இல்லாத துறை இது. பின்னலாடை தயாரிப்பில் இந்திய அளவில் திருப்பூர் 60 சதவீதத்தை கடந்துள்ளது. நிரந்தர கண்காட்சி வளாகம் அமைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளாக பல சோதனைகள் ஏற்பட்டன. இதனால் எங்களை நிலை நிறுத்தவே பல போராட்டங்களை சந்திக்க வேண்டியதாகி விட்டது. வரும் காலங்களில் கோவை கொடிசியாவில் உள்ளது போல் திருப்பூரிலும் ஒரு வளாகம் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். ஏற்றுமதியை அதிகமாக உருவாக்கி தரும் நகரங்களில் காஞ்சிபுரம் , சென்னைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் திருப்பூர் இருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளில் காஞ்சிபுரத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு திருப்பூர் வந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்